உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவரிடம் கலெக்டர் ஆர்த்தி குறைகள் கேட்ட போது எடுத்த படம்

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-05-20 13:40 IST   |   Update On 2022-05-20 13:40:00 IST
மாவட்ட கலெக்டர் ஆர்த்தி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் ஆயிரகணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், உள் நோயாளிகளுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.

அவசர சிகிச்சை பிரிவு ,மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளின் வருகையை உறுதி செய்த அவர், உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் குறைகள் குறித்தும் கேட்டார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும், அவர்களுக்கு திருப்திகரமான சிகிச்சைகள் மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையை விட ஒரு மடங்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Similar News