உள்ளூர் செய்திகள்
வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை மின்வாரிய ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-05-19 11:01 GMT   |   Update On 2022-05-19 11:01 GMT
வத்திராயிருப்பில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருபவர் நிர்மல் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் வ.புதுப்பட்டி பகுதியில் மின் கணக்கீடு செய்து கொண்டிருந்த போது வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள போலீஸ்காரர் வேலுச்சாமி வீட்டிலும் மின் கணக்கீடு செய்ய சென்றுள்ளார்.

அவரது வீடு 3 நாட்களாக பூட்டி இருந்ததாகவும் ,அதனால் கணக்கீடு செய்ய முடியாமல் திரும்பி சென்றாதகவும், போலீஸ்காரர் வேலுச்சாமியிடம் நிர்மல் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அப்போது வேலுச்சாமி, மின் கணக்கீட்டாளர் நிர்மல் பிரபாகரனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் வேலுச்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உடனே  போலீசார் அவர்களை சமாதானம் செய்து சம்மந்தப்பட போலீஸ்காரர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News