உள்ளூர் செய்திகள்
ஆரோவில் நிர்வாகத்துக்கு எதிராக ஒரு தரப்பினர் நிர்வாக அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்ட காட்சி.

வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம்

Published On 2022-05-19 08:52 GMT   |   Update On 2022-05-19 08:52 GMT
ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக வெளிநாட்டினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்
புதுச்சேரி:

ஆரோவில் நிர்வாக அலுவலகத்தை ஆரோவில் வாசிகள் திடீரென முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோவில் சர்வதேச நகரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை அமைக்க பணிகள் நடைபெற்றது. 
ஒருதரப்பு ஆரோவில் வாசிகள் இத்திட்டத்தினை எதிர்த்தனர். இதனால் வளர்ச்சி திட்ட பணிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் மரங்களை வெட்டாமல் வீடுகளை இடிக்காமல் பணிகள் தொடரலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த நிலையில் நேற்று நிர்வாக குழு கூட்டம் நடந்தது. ஆரோவில் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக இன்று காலை 500-க்கும் மேற்பட்ட ஆரோவில் வாசிகள் ஆரோவில் நகர நிர்வாக செயலகம் அலுவலகத்தில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News