உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஓசூரில் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர்,
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார் கலந்து கொண்டு, பயனா ளிகளுக்கு அடையாள அட்டைகள், கண் கண்ணாடி, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அவரது தலைமையில் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கோவிந்தன், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பூபதி, ஓசூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக், வீரமணி உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காசிலிங்கம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் ஸ்ரீலட்சுமி, மோசின் தாஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.