உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-05-17 15:44 IST   |   Update On 2022-05-17 15:44:00 IST
தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் :

கொட்டரை நீர்தேக்கம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். இதில்  மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதியின்படி கொட்டரை நீர்தேக்கம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இலவச வீடு மற்றும் வீட்டுமனைபட்டா வழங்கவேண்டும், 

அரசு வேலை, சிறப்பு கடன் அட்டை, பாசன வசதி ஏற்படுத்திதருதல், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல், நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு பணம் பட்டுவாடா செய்தல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷமிட்டனர்.

 பின்னர் மாநிலதலைவர் விசுவநாதன் கூறுகையில், கொட்டரை நீர்தேக்கம் அணை கட்ட நிலம் கொடுத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Similar News