உள்ளூர் செய்திகள்
கோடைகால சாகுபடிக்கு தண்ணீர் இறைக்கும் விவசாயி.

நிலக்கடலை சாகுபடி தீவிரம்

Published On 2022-05-17 09:16 GMT   |   Update On 2022-05-17 09:16 GMT
வேதாரண்யம் பகுதியில் கோடைக்கால நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகு த்தகை, நாலுவேதபதி, செட்டிபுலம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500 ஏக்கரில் கோடைக்காலத்தில் 90 நாட்களில் மகசூல் தரக்கூடிய நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலக்கடலை சாகுபடிக்கு தண்ணீரை மோட்டார் மூலம் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது நிலக்கடலை பூத்து பிஞ்சு விட ஆரம்பித்துள்ள நிலையில் செடியில் வெள்ளை நோய் மற்றும் மஞ்சள்புள்ளிநோய் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது இதனால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக கடலை சாகுபடியை பார்வையிட்டு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News