உள்ளூர் செய்திகள்
தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

Published On 2022-05-17 14:35 IST   |   Update On 2022-05-17 14:35:00 IST
சுதேசி, பாரதி மில்லை தொடர்ந்து இயக்க கோரி தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தனர்.
புதுச்சேரி:

புதுவையின் பிரசித்தி பெற்ற சுதேசி, பாரதி மில்களை வருகிற 30-ந் தேதியுடன் மூட ஆலைகளின் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மில்லை தொடர்ந்து இயக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

தொழிற்சங்கங்களின் சார்பில்   ஆம்பூர் சாலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. செயல்தலைவர் அபிஷேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, சி.ஐ.டி.யூ. சீனுவாசன்,- ஐ.என்.டி.யூ.சி. சொக்கலிங்கம், ஞானசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், சங்கரன், ம.தி.மு.க. கபிரியேல் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். 

இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து, மில்களை புனரமைத்து தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.  

Similar News