உள்ளூர் செய்திகள்
மாகியில் அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

மாகியில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Published On 2022-05-17 14:15 IST   |   Update On 2022-05-17 14:15:00 IST
மாகியில் அமைச்சர் சாய் . ஜெ.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை பிராந்திய பகுதியான மாகியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவண-குமார் குடிமை பொருள் வழங்கல் துறை, சிறுபான்மையினர் துறை, தீயணைப்பு துறை, நகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது அந்தந்த துறைகளில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய அவர், ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகளை அதிகாரிகள் மூலம் கேட்டறிந்தார். 

துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை அதிகாரிகள் வரையறுத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய- மாநில அரசின் நிதியிலிருந்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார். 

மேலும் மக்கள் பிரச்சி-னைக்காக அதிகாரிகள் உடனுக்குடன் என்னிடம் தொடர்புகொண்டு மாகி மக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் மேம்-பாட்டிற்காக உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News