உள்ளூர் செய்திகள்
கழிவு நீர் வாய்க்கால் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ரூ.12 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் பணி- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2022-05-16 14:51 IST   |   Update On 2022-05-16 14:51:00 IST
நோணாங்குப்பத்தில்ரூ .12 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் பணியை சபாநாயகர் ஏம்பலம் ெசல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.12.65 லட்சம் மதிப்பில் யூ வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கவர் சிலாப் அமைக்கப்படுகிறது.

இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நடந்தது. நிகழ்ச்சியில் தொகுதி   எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணவாளன், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர். நடராஜன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சீத்தாராமன், பூபாலன், திருமுருகன், எஸ்.வி.எஸ். குமரன், கூட்டுறவு சங்க தலைவர் தட்சணாமூர்த்தி பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், சக்திபாலன், ஜெயராமன், திருநாவுக்கரசு, கோபால கிருஷ்ணன், கணேசன்,   ராதா,   இளங்கோ, ராஜேந்திரன், சீதாராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News