உள்ளூர் செய்திகள்
பாம்பை பிடித்த இளைஞர் ஒயிட் அன்பு.

பூஜை அறையில் புகுந்த 7 அடி பாம்பு

Published On 2022-05-16 14:48 IST   |   Update On 2022-05-16 14:48:00 IST
நாவற்குளத்தில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பூஜை அறையில் புகுந்த 7 அடி பாம்பு மீட்டு வனத்தில் இளைஞர் விட்டார்.
புதுச்சேரி:

ஓட்டல் உரிமையாளர் பூஜை அறையில் இருந்த 7 அடி நீள பாம்பை வாலிபர் மீட்டு வனத்தில் விட்டார்.

புதுவையை அடுத்த தமிழக–பகுதியான நாவற்குளம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா.

இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பூஜை அறையில் ஒரு பாம்பு ஒன்று புகுந்தது. 

பீதியடைந்த ராஜா மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை விரட்டுவதற்கு முயற்சித்தனர். ஆனால் பூஜை அறையில் இருந்து பாம்பு வெளியேறாமல் அவர்களை  மிரட்டியது. 

உடனே ராஜா ஆரோவில் போலீஸ் நிலைத்திருக்கும், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தார். 

உடனே பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒயிட் அன்பு என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சென்றார். அங்கு வீட்டின் பூஜை அறையில் இருந்த சுமார் 7 அடி நீளமுடைய சாரை பாம்பை லாவகமாக அந்த வாலிபர் பிடித்தார்.

பின்னர் நாவர்குளம் காடுகள் நிறைந்த வனப்பகுதியில் சாரைப்பாம்பு விடப்பட்டது. இதன் பின்னரே ராஜா குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நிம்மதி அடைந்தனர்.

Similar News