உள்ளூர் செய்திகள்
சென்னிமலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி

Published On 2022-05-14 15:34 IST   |   Update On 2022-05-14 15:34:00 IST
நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
சென்னிமலை:

நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னிமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.


நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கணக்கெடுப்பது வழக்கம். 

அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி சென்னி மலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு,  ஊத்துக்குளி ரோடு, மற்றும் கொடுமணல் ரோடு ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த 12 பணியாளர்கள் இரவு, பகலாக கடந்த 5 நாட்களாக வாகனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைகளில் செல்லும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். சென்னிமலை - காங்கேயம் செல்லும் மெயின் ரோட்டில் மட்டும் 15 நிமிடத்தில் சுமார் 600 வாகனங்கள் சாலையில் செல்வதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

சென்னிமலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News