உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2022-05-14 15:28 IST   |   Update On 2022-05-14 15:28:00 IST
சத்தியமங்கலத்தில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

சத்தியமங்கலத்தில் தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் அடுத்த மேட்டு நாசுவம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்களது மகள் திரிஷா (16) பவானி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷா நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். தொடர்ந்து திரிஷா தனது அம்மாவுக்கு போன் செய்து தன்னை தேட வேண்டாம் என கூறி போனை அனைத்து வைத்து விட்டார்.

இதையடுத்து அவரது பெற்றோர் திரிஷாவை அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் யாழினி (16). இவர் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காைல தேர்வு எழுதுவதற்காக யாழினியை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து சென்றார். பள்ளி நுழைவு வாயில் பகுதியில் அவரை விட்டு விட்டு சென்றார். தேர்வு முடிந்து மதியம் நீண்ட நேரமாகியும யாழினி வரவில்லை.

இதையடுத்து விஜயகுமார் பள்ளிக்கு சென்று தனது மகள் குறித்து விசாரித்தார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என  தெரிய வந்தது. யாழினியை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து விஜயகுமார் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Similar News