உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தரமான விதைகளை விதைத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்

Published On 2022-05-14 15:21 IST   |   Update On 2022-05-14 15:21:00 IST
விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என விதை பரிசோதனை அலுவலர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தில் செயல்பாடுகளை திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், 

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் விவசாயிகள் சித்திரை, வைகாசி பட்டம்  சாகுபடி செய்ய உள்ள மக்காசோளம், சோளம், உளுந்து, கம்பு, பயறுவகை பயிர்கள், எள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் தரமான விதையே நல்விளைச்சலுக்கு அடிப்படை ஆதாரம். தரமான விதைகளை விதைத்தாலே 50 சதவிளைச்சலுக்கு உத்தரவாதம் ஆகும்.

அவ்வளவு முக்கியமான விதையை தரமானதாக உள்ளதா என்பதை கண்டறிந்து விதைத்திடவேண்டும். சாகுபடி செய்யப்படயுள்ள, விதைகுவியலில்லிருந்து விதை மாதிரி விதைகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்தில் விதை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதையின் சுத்ததன்மை மற்றும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்படுகின்றது.  

நன்கு சுத்தமான தரமான விதைகளை பயன்படுத்துவதால் வாலிப்பான நாற்று, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத நாற்றுகளை பெறமுடியும். மேலும் நேரடி விதைப்பாக இருக்கும் பட்சத்தில் சரியான பயிர்  எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர் எண்ணிக்கை இருந்தால் தான் அதிக மகசூல் எடுக்க முடியும் என்றார்.

Similar News