உள்ளூர் செய்திகள்
பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் நலனுக்காக வேளாங்கண்ணிக்கு நடைபயண பிரார்த்தனை
நாகூர் தேசிய பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் நலனுக்காக நடைபயண பிரார்த்தனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியைகள் நாகூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மாணவர்கள் நலனுக்காக நடைபயணம் மேற்கொண்டனர்.
பள்ளி இறுதி நாள் முடிந்த மறுநாளே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடை பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பி சிறப்பாக தேர்வு எழுதினால் பள்ளி ஆசிரியைகள் 8 பேர் வேளாங்கண்ணிக்கு நடந்து வருவதாக வேண்டி இருந்தனர்.
மாணவர்கள் நோய் பாதிப்பு இல்லாமல் மீண்டும் சிறப்பாக தேர்வு எழுதியதால் நடைபயணம் மேற்கொண்டனர்.