உள்ளூர் செய்திகள்
பதிவேடுகளை முறையாக பராமரிக்காத 2 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காத 2 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது புளியந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் லலிதா அங்கு வைக்கப்பட்டுள்ள ஊராட்சி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து புளியந்துறை ஊராட்சி செயலாளராக இருந்து வரும் சண்முகம் (45) என்பவரை சம்பவ இடத்திலேயே பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
புளியந்துறை ஊராட்சி ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், பூரணச்சந்திரன், தாரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் லட்சுமிபாலமுருகன், சிவபாலன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
இதேபோல், மயிலா டுதுறை மாவட்டம்சீர்காழி அருகே காட்டூர் ஊராட்சி யில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் வேல்மு ருகன் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவண ங்களை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் அவரையு ம்பணி யிடை நீக்கம் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். கொள்ளிடம் ஒன்றியத்தில் 2 ஊராட்சி செயலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது