உள்ளூர் செய்திகள்
கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகம்

Published On 2022-05-14 15:06 IST   |   Update On 2022-05-14 15:06:00 IST
சட்டநாதபுரத்தில் கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் கிராமத்தில் கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன.
 
11ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கல இசை முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.

தொடர்ந்து யாகசா லையில் வைத்து பூஜிக்க ப்பட்ட புனிதநீரை வேத மந்திரங்கள் ஓத சர்வசாதகம் திருக்கோலக்கா கார்த்தியை சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சா ரியார்கள் விமான கலசங்களில் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர்.

 கும்பாபிஷேகத்தில் சுந்தரேசன், ஜெகதீசன் குடும்பத்தினர் மற்றும் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல், ஒன்றிய கவுன்சிலர் விசாகர், ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி, பாமக மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் முருகவேல் கிராம நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Similar News