உள்ளூர் செய்திகள்
பணத்தை திருப்பி கேட்ட தந்தையை கத்தியால் கீறிய மகன்
பவானி அருகே பணத்தை திருப்பி கேட்ட தந்தையை கத்தியால் கீறிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
பவானி அருகே பணத்தை திருப்பி கேட்ட தந்தையை கத்தியால் கீறிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.
பவானி அடுத்த கேசரிமங்கலம் சித்தார் - மேட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 70). இவரது மனைவி இருசாயி (60). அதே பகுதியில் முத்துவின் மகன் மாது என்கிற மாதப்பன் (40) என்பவரும் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் முத்து தனது மகன் மாதப்பனுக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மகனிடம் தான் கொடுத்த பணத்தை முத்து திருப்பி கேட்டுள்ளார். அப்போது மாதப்பன் தந்தை என்று பாராமல் தகாத வார்த்தையால் பேசி, உனக்கு எதற்கு பணம் தர வேண்டும், பணம் திரும்ப கேட்டால் கத்தியால் குத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் மாதப்பன் கத்தியால் முத்துவின் இடது கை உள்பக்கமாக மணிக்கட்டுக்கு மேல் கீறி உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் முத்துவை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சசைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பென்டர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.