உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவன் மாயமமான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவன் மாயமமான சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் மேகநாத் (14) என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காப்பகத்தில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி மேகநாத் வெளியே சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் காப்பகத்துக்கு வரவில்லை. இதையடுத்து பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரிய வந்தது.
அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.