உள்ளூர் செய்திகள்
குரங்கு கடித்ததில் காயம் அடைந்த முதியவர் குணசேகரன்.

குரங்கு கடித்து முதியவர் படுகாயம்

Published On 2022-05-13 09:34 GMT   |   Update On 2022-05-13 09:34 GMT
சீர்காழி அருகே குரங்கு கடித்ததில் முதியவர் படுகாயமடைந்தார்.
சீர்காழி:

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் மந்தக்கரை என்ற இடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக 2 ஆண் குரங்குகள் அங்குள்ள மரங்களில் தங்கி ஆடு, மாடு, நாய் மற்றும் மனிதர்களை அப்பகுதியில் செல்லும்போது போது விரட்டி பாய்ந்து சென்று கடிக்க வருகிறது. இதனால் அப்பகுதியே செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், கிராம பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவி த்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசே கரன் (வயது 65) என்பவர் வீட்டிலிருந்து சற்றுதூரம் உள்ள மந்தக்கரை பகுதி க்கு சாலையில் நடந்து கொண்டிருந்தார். 

ஆனால் எதிர்பாராத விதமாக இரவு நேரத்தி லும் ஓடிவந்த ஒரு குரங்கு குணசேகரன் மீது பாய்ந்து இரண்டு கைகளையும் கடித்துக் குதறியதுஇதில் படுகா யமடைந்த குணசே கரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆர்ப்பாக்கம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் இரண்டு ஆண் குரங்குகளையும் உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் கொண்டுவிட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News