உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

15 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது

Update: 2022-05-12 10:06 GMT
பூஸ்டர் தடுப்பூசி, 3,248 சுகாதார பணியாளர்கள், 2,929 முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட, 9 ஆயிரத்து, 770 பேர் என, 15 ஆயிரத்து, 947 பேர் செலுத்தி உள்ளனர்.
ஈரோடு:

இந்தியாவில் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், அதன் பின்னர் 45 வயது மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், அதன் பின்னர் 18 வயதுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 15 முதல் 18 வயது இன்றைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அதன் பின்னர் 12 முதல் 14 வயது உடைய குழந்தைகளுக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்திலும் கொரோணா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் இதுவரை கொரோனா முதல் தவணை தடுப்பூசியை, 16 லட்சத்து, 54 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 13 லட்சத்து 14 ஆயிரத்து, 648 பேரும் செலுத்தி உள்ளனர். 

இதில், முதல் தவணையாக, 9,210 மாற்றுத்திறனாளி–களுக்கும், இரண்டாம் தவணையாக, 6,447 மாற்றுத்திறனா–ளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில், 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட, 1.54 லட்சம் மாணவர்களும் அடங்குவர்.

தவிர பூஸ்டர் தடுப்பூசி, 3,248 சுகாதார பணியாளர்கள், 2,929 முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட, 9 ஆயிரத்து, 770 பேர் என, 15 ஆயிரத்து, 947 பேர் செலுத்தி உள்ளனர்.

தவிர ஒவ்வொரு வாரமும், வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என சுகாதாரத்துறையினர் கேட்டு கொண்டனர்.
Tags:    

Similar News