உள்ளூர் செய்திகள்
file photo

திருமாந்துறையில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம்

Published On 2022-05-12 09:34 GMT   |   Update On 2022-05-12 09:34 GMT
சிறப்பு பட்டா மாற்றம் முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்தில் உள்ள நிலுவை மனுக்கள் தீர்வு செய்திடும் பொருட்டு சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் முகாம் திருமாந்துறை கிராமநிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. 

முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பால்பாண்டி தலைமையில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, மண்டல துணை வட்டாட்சியர் பாக்யராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து 22 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், தலைமை சர்வேயர் சந்திரன், சர்வேயர் பிரவீன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து திருமாந்துறை வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தங்களது நில ஆவணங்களில் நில அளவை (புல) எண்கள்,  உட்பிரிவு எண்கள், தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப் பிழை திருத்தம், உறவுநிலை குறித்த திருத்தம், செய்யவும் இந்த முகாம் பயன்பட்டது என்றனர்.

Tags:    

Similar News