உள்ளூர் செய்திகள்
மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம்
வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே புஷ்பவனம், நாலுவேதபதி உட்பட பல்வேறு மீனவ கிராமங்களில் நாகை இந்திய கடற்படை பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நாகை முகாம் லெப்டினட் கமாண்டர் கர்மீந்தர் சிங் தலைமையில் நடந்தது.
கூட்டங்களில் மீனவ பிரதிநிதிகளிடம் பேசிய கடற்படை அதிகாரிகள் கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணை போகாமல் குற்றங்கள் மற்றும் கஞ்சா, போதை பொருள்கள் கடத்தல், அந்நியர்கள், படகுகள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீஸ் மற்றும் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும், கரை ஒதுங்கும் பொருள்கள், சந்தேகநபர்கள் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என்றும் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்தும் வேண்டுகோள் விடுத்தும் பேசினர்.
கூட்டத்தில் மீன்வளத்துறை மேற்பா–ர்வையாளர் விக்னேஷ், கடற்படை வீரர்கள் ராஜேஷ், நவீன், அலோக் குமார் உட்பட அதிகாரிகளும் ரமேஷ், தினேஷ், முருகானந்தம் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார் தலைமையிலான மீனவ ர்களும் கலந்துகொண்டனர்.