உள்ளூர் செய்திகள்
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுபடுத்த வேளாண்மை துறையினர் நேரடி செயல்விளக்கம் அளித்தனர்.

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண்மை துறை நேரடி செயல் விளக்கம்

Published On 2022-05-11 14:57 IST   |   Update On 2022-05-11 14:57:00 IST
வேதாரண்யம் பகுதியில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் நேரடி செயல் விளக்கமளித்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், தாமரைபுலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலில் தென்னை மரங்களில் அதிக அளவு வெள்ளை ஈ (ருகோஸ் சுருள் நோய்) தாக்குதல் காணப்படுகிறது. இந்த நோய் தென்னை வாழை, மா, முந்திரி, கொய்யா, சீதாப்பழம் ஆகிய சாகுபடியிலும் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நோயை கட்டுப்படுத்த நாலுவேதபதியில் வேளாண்மைதுறையினர் நேரடி செயல்விளக்கம் அளித்தனர் பின்பு விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் கூறிய ஆலோசனையில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மஞ்சள் நிறம் வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உடையதால் மஞ்சள் நிறத்தில் பாலீத்தின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளை ஐந்தடி நீளம் ஒன்னரை அடி அகலத்தில் ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம், தென்னை மரங்களில் நான்கடி உயரத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அதில் வெள்ளை கிரீஸ் அல்லது ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்கலாம்

இதில் வெள்ளை ஈ ஒட்டிக்கொள்ளும் மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிர, செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம் பூச்சிதாக்கப்பட்ட தென்னை மரங்களிலே மேல் தலிபான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்

தென்னையில் மஞ்சள் நிற பூக்கள் தரும் சனப்பு செனடுப்பூ காராமணி போன்ற பயிர்களை தென்னையில் ஊடுபயிராக விதைப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு கண்ணாடி இறக்கைபூச்சி என்கார்னியா ஒட்டுண்ணிகளை பெருக்கத்தை அதிகரித்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதன் போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தவிர்த்து இயற்கை எதிர்ப்பூக்கிகள் வளர்ப்பதற்கு உரிய சூழலை மேம்படுத்த சாலச் சிறந்ததாகும்

எனவே தென்னை விவசாயிகள் இந்த ஆலோசனையை பின்பற்றி வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்திடலாம் என வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார் உடன் வேளாண்மை அலுவலர்கள் நவீன், யோகேஷ் உதவி வேளாண்மை அலுவலர் கனிமொழி மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Similar News