உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியே உலா வந்த ஒற்றை யானையை படத்தில் காணலாம்.

ஒகேனக்கல் பகுதியில் உணவு, தண்ணீர் தேடி உலா வரும் ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதி

Published On 2022-05-10 10:57 GMT   |   Update On 2022-05-10 10:57 GMT
உணவு தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அப்போது யானைகள் வருவது வழக்கம்.

 தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு தண்ணீர் தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.
இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆனால் போக்கு காட்டிவிட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட யானைகள்  ஒகேனக்கல் வனப் பகுதியில் நுழைந்தது. 
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் ஒற்றை யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித் திரிகின்றது. இந்த யானையை வனப்பகுதி சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை உடைத்தும், இலைகளை தின்றுவருகின்றது. காலை மாலை நேரங்களில் ஒகேனக்கல் பென்னாகரம் சாலையை ஒற்றை யானை கடந்து செல்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கூறுகையில் யானைகள் நடமாட்டத்தை காலை மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்கள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். 

யானைகளுக்கு உணவாக கரும்பு சோகை தென்னை மட்டை ஆகியவற்றை அதிக அளவில் போடவேண்டும். யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Tags:    

Similar News