உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-05-10 15:42 IST   |   Update On 2022-05-10 15:42:00 IST
முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிந்தாமணி கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த வீரமணி இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மனைவி ராணி ஆகியோருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் தங்களது நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்த பனை நுங்குவை யாரோ வெட்டி சென்றுவிட்டதாக வீரமணியின் தாயார் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கிருந்த அன்புமணி அவரது தம்பி, தாயார் ராணி மற்றும் அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் ஆகியோர் இது எங்களுக்கு சொந்தமான மரம் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். 

இதனை பார்த்த வீரமனணி இப்படி திட்டுகிறீர்கள் என கேட்டதற்கு அனைவரும் சேர்ந்து அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த வீரமணி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் வீரமணியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News