உள்ளூர் செய்திகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில

சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் ஆய்வு கூட்டம்

Published On 2022-05-10 09:43 GMT   |   Update On 2022-05-10 09:43 GMT
மயிலாடுதுறையில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர்லலிதா தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் லலிதா பேசியதாவது:-

முதலமைச்சர் ஆணைப்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரார்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பணிகளும் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் குறிப்பாக தமிழ்நாடு கிராமபுற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்க்குள் செய்து முடிக்க வேண்டும். சாலை பணிகள் நடைபெற்று வரும் பொழுது நான் நேரில் வந்து சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்க்கொள்வேன். எக்காரணம் கொண்டும் பணிகள் காலதாமதம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைஇயக்குநர்மு ருகண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி பொறியாளர் சாமிநாதன் மற்றும் ஊராட்சித்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News