உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைப்பு

Published On 2022-05-10 08:13 GMT   |   Update On 2022-05-10 08:13 GMT
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோபி:

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 58 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டன் பாளையம் மலர் நகரை சேர்ந்தவர் டேவிட்சூசை மாணிக்கம் (63).ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி இசபெல்லா ஜான்சி ராணி (60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை .

கணவன் மனைவி இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உறவினர்களை பார்ப்பதற்காக கோவை சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து டேவிட் சூசை மாணிக்கத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ேடவிட் சூசை மாணிக்கம் கோபி ெசட்டிபாைளயம போலீ சாருக்கு தகவல் கொடுதத் தார். ேமலும் அவர் மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

ேமலும் பீரோவில் வைத்திருந்த 58 பவுன் நகைகள், மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை காணவில்லை.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்டு வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து கோபிெசட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை பேரில் கோபிசெட்டி பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், சுபாஷ் மற்றும் 10 போலீசார் கொண்ட தடைப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர்ந்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News