உள்ளூர் செய்திகள்
சிறுத்தை

தாளவாடி அருகே நாயை கடித்த சிறுத்தை- விவசாயி சத்தம் போட்டதால் கரும்பு காட்டுக்குள் பதுங்கியது

Update: 2022-05-10 05:02 GMT
வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (55) என்பவரின் வீட்டில் இருந்த காவல் நாயை அங்கு வந்த சிறுத்தை கடித்தது. இதை பார்த்த காளிப்பன் சத்தம் போடவே சிறுத்தை நாயை விட்டுவிட்டு பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி கொண்டது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News