உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

12 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை புதைபடிமங்கள்

Published On 2022-05-09 15:10 IST   |   Update On 2022-05-09 15:10:00 IST
12 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை புதைபடிமங்களை கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்:

புதை படிமங்கள் ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ் பல்வேறு நாடுகளில் கண்டெடுத்த அரியவகை கடல்சார் உயிரினங்களின் படிமங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டர்  வெங்கட்பிரியாவிடம் ஒப்படைத்தார்.

இதுக்குறித்து புதை படிமங்கள் ஆராய்ச்சியாளர் நிர்மல் ராஜ் கூறியதாவது,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு அடியில் இருந்தது.

அப்போது வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின.சாத்தனுரில் கண்டெடுக்கப்பட்ட கல்மர படிமம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

அதுமட்டுமின்றி, 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.

உலகின் பல்வேறு நடுகளுக்குச் சென்று கடல்சார் உயிரினங்கள் குறித்தும் , புதை படிமங்கள் குறித்தும் ஆரய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நான் கண்டறிந்து எடுத்த மடாஸ்கர் மாநாட்டில் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் தலைக்காலி படிமங்கள்,  

பொலிவியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதியில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல் சுறாவின் பல் படிமங்கள் போன்றவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக உள்ள அரசு அருங்காட்சியக்த்தில் வைப்பதற்காக கலெக்டரிடம் வழங்கியுள்ளேன் என்றார்.

Similar News