உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2022-05-09 13:24 IST   |   Update On 2022-05-09 13:24:00 IST
மொடக்குறிச்சி அருகே நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

மொடக்குறிச்சி அருகே நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சித்ரா (37). இவரது மகன் கோபி (20). சித்ரா கணவரை பிரிந்து கடந்த 17 வருடமாக அதே பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார்.

சித்ரா தறிபட்டறையில் கூலி வேலைக்கு சென்று வந்தார். கோபி கம்பி வேலி போடும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோபியும் அவருடன் வேலை பார்க்கும் சூரியன் என்பவரும் நட்டாற்றீஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது கோபி ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். திடீரென கோபி நீரில் மூழ்கத் தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறினார். ஆனால் அதற்குள் கோபி நீரில் மூழ்கி விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு  மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வேகமாக வந்தனர். 

அவர்கள் நீரில் மூழ்கிய கோபியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை பறிகொடுத்த சித்ரா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News