உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ஓர் சாதனையை மலராக ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட அதனை மாவட்ட ஊரக வளர்ச

அரசு நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை: கலெக்டர் உறுதி

Published On 2022-05-08 15:04 IST   |   Update On 2022-05-08 15:04:00 IST
அரியலூர் மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.
அரியலூர்:

அரியலூர் அலுவலக கூட்டரங்களில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனை மலரை கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி பொறுப்பினை ஏற்ற 100 நாட்களுக்குள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டட 7,937 மனுக்களில் 4,349 மனுக்கள் ஏற்கப்பட்டு ரூ.2.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அரியலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இதுவரையில் இல்லாத அளவாக அதிகபட்சமாக 2,289 விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி மதிப்பீட்டில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் மக்கள் மற்றும் நலிந்த பிரிவினர் பயன் பெறும் வகையில் 20,838 நபர்களுக்கு ரூ.734 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி மற்றும் 2,672 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.14.80 கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தொடர் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி அனைத்து பிரிவு மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதவும் குறுகிய காலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

2 பெற்றோர்களையும் இழந்த ஆதரவற்ற 3 குழற்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடும், மாதம் ரூ.3000 பராமரிப்புச் செலவும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோரை இழந்த 110 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனாவினால் உயிரிழந்த 521 நபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50,000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் கீழ் 64,859 மாணவ மாணவிகளுக்கு 2,648 பெண் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி எண்ணற்ற திட்டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News