உள்ளூர் செய்திகள்
சொத்து, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் த.மா.கா. சார்பில் நாளை சொத்து, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் நடக்கிறது.
ஈரோடு:
ஈரோட்டில் த.மா.கா. சார்பில் நாளை சொத்து, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் நடக்கிறது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சொத்து, வீட்டு வரி விலைவாசி உயர்வை கண்டி த்து ஜி.கே.வாசன் தலை மையில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாளை (திங்க ட்கி ழமை) வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் காலை 9.30 மணிக்கு த.மா.கா. சார்பில் சொத்து வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச்செ யலாளர் விடியல் சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த த.மா.கா. நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.