உள்ளூர் செய்திகள்
குருப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையில் ஊரக இைளஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்ப

ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி

Published On 2022-05-08 09:23 GMT   |   Update On 2022-05-08 09:23 GMT
பவானி அருகே அரசு விதைப்பண்ணையில் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஈரோடு:

பவானி அருகே அரசு விதைப்பண்ணையில் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின்  வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி 30 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் ஒரு பகுதியாக பவானியை அடுத்த குருப்பநாய்க்கன் பாளை யத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் ஈரோடு விதைச்சா–ன்று மற்றும் அங்கக–ச்சான்று உதவி இயக்குநர் மோகன–சுந்தரம் உளுந்து  வம்பன் 8 ரகம் விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார். 

இப்பயிற்சியின் போது பயறுவகை பயிர்களில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்ப பயிற்சி, கலவன்களை கண்டறிதல் மற்றும் அகற்றுதல் தொடர்பாக களப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

 மேலும் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வயல்மட்ட  விதைகளை சுத்தி நிலையத்தில் பெறும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சுத்திப்பணி மேற்கொள்ளுதல், விதைமாதிரி எடுத்தல், தேர்ச்சி பெற்ற விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியின் போது  பவானி வேளாண்மை உதவி இயக்குநர் குமாரசாமி, பண்ணை மேலாளர் முருகேசன், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி, விதைச்சான்று அலுவலர்   நாசர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News