உள்ளூர் செய்திகள்
ஏரிகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றி தூர்வாரவேண்டும்
திருமானூரில் அனைத்து ஏரிகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றி தூர்வாரப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் திருமானூரில் கொள்ளிட ஆற்றில் கதவுகளுடன் தடுப்பணை கட்டவேண்டும், திருமானூரில் நவீன அரிசிஆலை அமைக்கவேண்டும்,
திருமானூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள் ஆக்ரமிப்புக்களை அகற்றி தூர்வாரப்படவேண்டும்,
திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.