உள்ளூர் செய்திகள்
பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 22). இவரது தந்தை ராமசாமி, தாயார் நாகம்மாள் இறந்து விட்டதால் அவரது அத்தை தெய்வானை வீட்டில் வளர்ந்து வந்தார்.
பன்னீர்செல்வம் 10-ம் வகுப்பு படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். பன்னீர்செல்வம் அவரது பெற்றோர் இறந்ததில் இருந்தே மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணத்தில் இருந்துள்ளார். அவர் அத்தை வீட்டார் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் பன்னீர் செல்வம் மன ேவதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பன்னீர்செல்வத்தை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி ரவுண்டானா அருகே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவர் ஊமத்த காய்கள் (விஷம்) தின்றதாக தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.