உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை

Published On 2022-05-08 14:41 IST   |   Update On 2022-05-08 14:41:00 IST
சஸ்பெண்டு செய்யப்பட்ட மன உளைச்சலில் ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

சஸ்பெண்டு செய்யப்பட்ட மன உளைச்சலில் ஈரோடு மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மீரான் மொய்தீன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (52).இவரது மனைவி சாந்தி. செந்தில்குமார் ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் வேலை பார்த்து வந்தார். 

வேலை வாங்கி தருவதாக பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக செந்தில்குமார் தாற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டு கடந்த 2 வருடமாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  

இந்நிலையில் சம்பவத்தன்று ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற செந்தில்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். 

அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News