உள்ளூர் செய்திகள்
கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்.

கறிகோழி குஞ்சுகள் வளர்ப்பில் ஊதியத்தை உயர்த்தி தரகோரி விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-05-08 14:40 IST   |   Update On 2022-05-08 14:40:00 IST
கறிகோழி குஞ்சுகள் வளர்ப்பில் ஊதியத்தை உயர்த்தி தரகோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிகப்படியாக தனியார் நிறுவனங்கள் மூலம் கறி கோழி குஞ்சுகளை விவசாயிகளிடம் வளர்ப்பதற்காக  வழங்கி அதற்கு 1கிலோ கறிகோழிக்கு ரூ 6.50 பைசா வழங்கி வருகின்றனர்.

ஒரு கோழி 40 நாட்களில் 1 ½ முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக வளர்ச்சி பெறும். இதற்கு ஆகும்செலவு தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாகவும், ஆட்கள் சம்பளம், கரண்டு, தண்ணீர் செலவு இருப்பதால்  

நஷ்டம் ஏற்ப்படுவதாகவும் 1கிலோ கோழி கறிக்கு 12 ரூபாய்‌ வழங்க வேண்டும் என அரியலூர், கடலூர் மாவட்ட தமிழ்நாடு கறி கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நல சங்கம் சார்பில்

ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள 5 தனியார் நிறுவனங்களிடம் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இனி கோழிக் குஞ்சுகளை வளர்க்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

Similar News