உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-05-07 15:16 IST   |   Update On 2022-05-07 15:16:00 IST
குடியை மறக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

குடியை மறக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (46). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடி பழக்கத்தை  விடுவதற்காக புதுவலசு பகுதியில் உள்ள ஒரு முகாமில் முருகன் சேர்க்கப்பட்டு 4 மாதம் தங்கி அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த முகாமில் இருந்து முருகனை அவரது அக்கா ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அைழத்து வந்தார். ஆனால் தொடர்ந்து முருகன் குடி பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் முருகன் ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

 இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News