உள்ளூர் செய்திகள்
போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் - போலீஸ் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் - போலீசார் பங்கேற்ற விளையாட்டு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியை ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார். குண்டெறிதல்,கோகோ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கால்பந்து, வாலிபால், 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் தடகள போட்டி நடந்து வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், டவுன் இன்ஸ்பெக்டர் தேவராணி, கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் நிர்மலா, வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் உட்பட பல்வேறு போலீசார் மற்றும் பொதுமக்களிடையே விளையாட்டி போட்டு நடந்து வருகிறது.
பொதுமக்களும், போலீசாரும் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நாளை ஈரோடு சி.எஸ்.ஐ விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடை பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 சப் டிவிஷன்களிலும் இன்று பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிசுகளை வழங்குகிறார்.