உள்ளூர் செய்திகள்
சென்னிமலை அருகே அம்மன் கண் விழித்ததாக பரபரப்பு

சென்னிமலை அருகே அம்மன் கண் விழித்ததாக பரபரப்பு- பக்தர்கள் பரவசம்

Update: 2022-05-06 11:55 GMT
சென்னிமலை அருகே அம்மன் கண் விழித்ததாக வந்த செய்தி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகர் என்ற பகுதியில் சிவஞானசித்தர்கள் பீடம் அறக்கட்டளை சார்பில் ஓம் நர்மதை மருந்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

இந்த கோவிலில் உள்ள ஓம் நர்மதா அம்பிகை அம்மன் சிலைக்கு நேற்று மஞ்சள் கயிறில் விரலி மஞ்சள் இணைத்து கட்டப்பட்டது. பின்னர் சரவணன் என்பவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டினார்.

அப்போது அம்மன் கண் விழித்ததாகவும் அந்த காட்சி பிரமிப்பாகவும் பரவசமாகவும் இருந்ததாகவும் கூறினார்.

இந்த தகவல் பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Tags:    

Similar News