உள்ளூர் செய்திகள்
சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சத்தியமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2022-05-06 09:30 GMT
சத்தியமங்கலத்தில் இன்று காலை பாதாள சாக்கடை கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் இன்று காலை பாதாள சாக்கடை கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி 21, 22 வது வார்டில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாட்களாக பாதாள சாக்கடை நீர் நேரடியாக பிள்ளையார் கோவில் வீதி வழியாக பவானி ஆற்றில் கலந்து வருகிறது.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில் 21, 22 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திடீரென சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார்  விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால பொதுமக்கள் கழிவுநீர் கலப்பதை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி விரைந்து வந்தார். அவர்  மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பாதாள சாக்கடை உடைப்பு சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
Tags:    

Similar News