உள்ளூர் செய்திகள்
உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் விதைச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்ட

உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் ஆய்வு

Update: 2022-05-05 09:45 GMT
அந்தியூர் அருகே உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:

அந்தியூர் அருகே உயர் விளைச்சல் ரக சோள விதைப் பண்ணையில் ஆய்வு செய்தனர்.

அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதியில் ராஜா என்ற விவசாயி கே12 என்ற உயர்விளைச்சல் சோளம் ரகத்தினை பயிரிட்டு விதைப் பண்ணையாக பதிவு செய்துள்ளார்.  இந்த ரகமானது 95 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். மேலும், மானாவரிக்கு ஏற்றது. ஏக்கருக்கு 3000 கிலோ வரை மகசூல் தரக் கூடியது.

இவ்விதைப் பண்ணையினை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம்  ஆய்வு செய்தார். மேலும், கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று  இயக்குநர் மு.சுப்பையா  உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களுக்கு சோளம் விதைப்பண்ணையில் கலவன்கள் கண்டறிதல், கலவன்களை அகற்றுதல், குறித்தறிவிக்கப்பட்ட நோய்களை கண்ட–றிதல் குறித்து பயற்சி–யளி–க்கப்பட்டது. சாகுபடியாளருக்கு பயிர் பராமரிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் கூறிய–தாவது, இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுதானிய பயர்களின் உற்பத்தியை அதிகரிக்க இவ்விதைப் பண்ணையிலிருந்து கிடைக்கும் விதைகளை சுத்தி செய்து விதை மாதிரியில் தேர்ச்சி பெற்றவுடன் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவித்தார். 
இப்பயிற்சியின்போது விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி உடனிருந்தார்.

Tags:    

Similar News