உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-04 15:31 IST   |   Update On 2022-05-04 15:31:00 IST
அந்தியூர் அருகே இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் தவிட்டு பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யதர்ஷினி (19). நேற்று இரவு இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வீட்டிற்கு வந்த திவ்யதர்ஷினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் அந்தியூர் தவிட்டுபாளையம் பழனியப்பா குறுக்கு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (39). இவர் நகலூரில் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவி உள்ளார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ஈஸ்வரன்  மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை நகலூரில் ஈஸ்வரன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News