உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-05-04 15:12 IST   |   Update On 2022-05-04 15:12:00 IST
ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 26). இவர் அந்த பகுதியில் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

 கடந்த ஒரு வாரமாக விஜயகுமார் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இதுபற்றி அவரது தந்தை கிருஷ்ணசாமி கேட்டபோது அவர் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். 

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கிருஷ்ணசாமி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. 

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News