உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாம்பு கடித்து மூதாட்டி பலி

Published On 2022-05-01 15:48 IST   |   Update On 2022-05-01 15:48:00 IST
பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

பாம்பு கடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜி (வயது 75). கணவன்- மனைவி இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

 சம்பவத்தன்று ராஜி பச்சையப்பன் கோவில் தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் பிடிக்க சென்றபோது அவரை பாம்பு கடித்தது. 

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News