உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

27, 351 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-05-01 15:43 IST   |   Update On 2022-05-01 15:43:00 IST
ஈரோட்டில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 27, 351 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோட்டில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 27, 351 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என  சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 579 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை, 9  மணி முதல் மாலை, 5  மணி வரை நடந்தது. இம்முகாமில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியும், தகுதியான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு, கோர்பிவேக்ஸ், கோவாக்சின் தடுப்பூசியும், பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மொத்தம், 2,316 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மற்றும் புறநகர பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.

மாவட்ட அளவில் ஒரே நாளில், முதல் தவணை தடுப்பூசி, 5,217 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி, 21,221 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி, 913 பேர் என, 27,351 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Similar News