உள்ளூர் செய்திகள்
திருவள்ளூவர் அரசு பள்ளியில்கால்நடை வளர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுவை திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்நடைகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் மேம்பாட்டில் கால்நடை டாக்டர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு பள்ளி துணை முதல்வர் கலாவதி முன்னிலை வகித்தார்.மத்திய பிராணிகள் நலவாரிய அதிகாரி செல்வமுத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடைதுறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து சான்றிதழ் வழங்கினார்.
கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் சுபயர் முகமத், டயானா பிரியதர்ஷினி. தன்வந்தி, ஹேமாவதி ஆகியோர் மாணவர்களுக்கு கால்நடை பாதுகாப்பது குறித்து விளக்கினர்.
100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்க ஏற்பாடுகளை பிராணிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், கலைவாணன்,சக்திவேல்,சதீஷ், ராகுல் ஆகியோர் செய்து இருந்தனர்.