உள்ளூர் செய்திகள்
கடற்கரை

மாமல்லபுரம் அருகே கடற்கரையில் அமாவாசை திதி செய்ய தடை

Published On 2022-04-30 15:37 IST   |   Update On 2022-04-30 15:37:00 IST
மாமல்லபுரம் அருகே கடற்கரையில் அஸ்தி கரைக்ககூடாது என வெண்புருஷம் கிராம மக்கள் ஊரின் நுழைவு வாயிலில் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் மீனவர் கிராம பகுதிகளான வெண்புருஷம் கடற்கரை பகுதியை தூய்மையாக வைக்கும் நோக்கத்தில் அங்கு திதி செய்யவோ, அஸ்திகளை கரைக்கவோ கூடாது என ஊர்மக்கள் தீர்மானம் செய்து அதை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று வெளியூர்களில் இருந்து எவரேனும் இங்கு வந்து மூதாதையர் திதி சடங்குகள் செய்யக்கூடாது, கடற்கரையில் அஸ்தி கரைக்ககூடாது என வெண்புருஷம் கிராம மக்கள் தற்போது ஊரின் நுழைவு வாயிலில் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.


Similar News