உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி சாவு
காஞ்சிகோவிலில் கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
காஞ்சிகோவிலில் கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோவில் அறியன் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பவிஸ்மித்ரன் (வயது 21). இவர் சித்தோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல் முழுவதும் சிலந்தி நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.