உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.

உடன்குடியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-04-30 14:55 IST   |   Update On 2022-04-30 14:55:00 IST
உடன்குடியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உடன்குடி:

உடன்குடி பேரூராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரூராட்சி முன்பிருந்து புறப்பட்ட பேரணியை பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்து பேசினர்.

 அப்போது அவர், மாணவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வாழவேண்டும், சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ.பள்ளித் தலைமை யாசிரியர் ஜெபசிங் மனுவேல், பேரூராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி வில்லிகுடியிருப்பு, கீழ் பஜார், மெயின் பஜார் 4 சந்திப்பு, வடக்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார் வழியாக பேரூராட்சியை அடைந்தது.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் டேனியல்அதிசயராஜ், எட்வின், ரவிக்குமார், லிவிங்ஸ்டன் மற்றும் மாணவர்கள், சாலைப் பாதுகாப்பு படை மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News